News Trend

3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது – இந்திய வானியல் ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது என்று இந்திய வானியல் ஆய்வு மையம் (ஐஎம்டி) முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய வானியல் ஆய்வு மையம் வெளியிட்டு  உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு ஆப்பிரிக்கக் கடல், கொமோரின் – மால்தீவுகள் பகுதி, லட்சதீவு, கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள்.  3 நாட்களுக்கு முன்னதாக தென்மேற்கு பருவமழை  தொடங்கி உள்ளது.
ஆய்வு மைய கணிப்புப்படி, ஜூன் 6 ம் தேதி பருவமழை மும்பையை  சென்றடையும்.என கூறி உள்ளது
கடந்த 3-4 நாட்களில் கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. கேரளாவில்  14 மழைப்பொழிவு கண்காணிப்பு நிலையங்கள் மே 25 முதல் 60 சதவீத  மழைப்பொழிவைப் பதிவு செய்துள்ளன.
Advertisements

Categories: News Trend

Tagged as: , ,